< Back
சினிமா செய்திகள்
வெள்ளை நிறத்துக்கு மாற நடிகை கஜோலுக்கு அறுவை சிகிச்சையா? கஜோல் விளக்கம்
சினிமா செய்திகள்

வெள்ளை நிறத்துக்கு மாற நடிகை கஜோலுக்கு அறுவை சிகிச்சையா? கஜோல் விளக்கம்

தினத்தந்தி
|
13 Feb 2023 2:03 PM IST

வெள்ளையாக மாறுவதற்காக எந்தவித சர்ஜரியும் செய்து கொள்ளவில்லை என்று கஜோல் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழில் மின்சார கனவு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கஜோல். வேலை இல்லா பட்டதாரி படத்தில் தனுசுடன் நடித்து இருந்தார். இந்தியில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். 30 ஆண்டுகளாக சினிமாவில் நீடிக்கிறார்.

இந்த நிலையில் கஜோல் கருப்பாக இருந்ததாகவும், சரும அறுவை சிகிச்சை செய்து வெள்ளையாக மாறி இருக்கிறார் என்றும் வலைத்தளத்தில் கேலி செய்தும், விமர்சித்தும் பலர் பேசி வந்தனர்.

இதற்கு விளக்கம் அளித்து கஜோல் கூறும்போது, "நீங்கள் எப்படி வெள்ளை நிறத்துக்கு மாறினீர்கள் என்று என்னை கேட்கிறார்கள். நான் வெள்ளையாக மாறுவதற்காக எந்தவித சர்ஜரியும் செய்து கொள்ளவில்லை. வெயிலில் அதிகமாக சுற்றாமல் ஜாக்கிரதையாக இருக்கிறேன். அதுதான் காரணம்.

வாழ்க்கையில் பத்து ஆண்டுகள் மிக அதிகமான வெயிலில்தான் படப்பிடிப்புகளில் பங்கேற்க வேண்டி வந்தது. அதன் காரணமாக கருப்பாக காட்சி அளித்தேன். இப்போது நான் வெயிலை விட்டு விலகி இருக்கிறேன். அதனால் தான் என் நிறம் மாறி இருக்கிறது. அவ்வளவுதானே தவிர எந்தவித அறுவை சிகிச்சையாலும் அல்ல'' என்றார்.

மேலும் செய்திகள்