< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'தலைவர் 170' படத்தில் இணைந்த நாயகிகள்..!
|2 Oct 2023 3:02 PM IST
'தலைவர் 170' படத்தின் படக்குழு குறித்த விவரத்தை தயாரிப்பு நிறுவனம் அறிவித்து வருகிறது.
சென்னை,
லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள படத்திற்கு 'தலைவர் 170' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு உள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். 'தலைவர் 170' படத்தின் படக்குழு குறித்த விவரத்தை தயாரிப்பு நிறுவனம் அறிவித்து வருகிறது.
அதன்படி நேற்று இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்தது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் இரண்டு நாயகிகளின் பெயர்களை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி இந்த படத்தில் நடிகை துஷாரா விஜயன் மற்றும் நடிகை ரித்திகா சிங் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.