< Back
சினிமா செய்திகள்
விளம்பரங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்
சினிமா செய்திகள்

விளம்பரங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்

தினத்தந்தி
|
28 April 2023 9:00 AM IST

உலகின் முதல் தரப் பொருளாக இருந்தாலும் அதை சந்தைக்கு கொண்டுவர விளம்பரங்கள் முக்கியம். அதற்கு வணிக நிறுவனங்கள் சினிமா நட்சத்திரங்களை பயன்படுத்துகின்றன. நயன்தாரா தொடங்கி இப்போதைய இளம் நடிகைகள் வரை விளம்பர படங்களில் கொடிக் கட்டி பறக்கிறார்கள்.

சினிமாவில் நூறு நாள் நடித்தாலும் கிடைக்காத சம்பளம் விளம்பர படங்களில் ஓரிரு நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்தாலே கிடைத்து விடுகிறது.

வெயில், மழை என உடலை வருத்திக்கொண்டு நடிக்கவும், குடும்பத்தை விட்டுவிட்டு அவுட்டோர் செல்லவும் அவசியமில்லை. விளம்பர படப்பிடிப்புகள் பெரும்பாலும் உள்ளூரிலேயே நடப்பது சவுகரியமாக உள்ளது.

இது போன்ற காரணங்களால்தான் நடிகைகள் போட்டி போட்டு விளம்பர படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

வட்டார மொழி நடிகையாக இருப்பவர் நேஷனல் பிராண்டில் நடிக்கும்போது நாடு முழுவதும் அறியப்படும் நட்சத்திரமாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

சினிமா நட்சத்திரங்கள் நடிக்கும் பெரும்பாலான விளம்பர படங்கள், எளிய மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் என்பதால், பொருட்களை விற்பதோடு மக்கள் மனதிலும் இடம் பிடித்து மார்க்கெட்டை தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது.

விளம்பர படங்களில் நடித்து கோடிகோடியாய் சம்பாதிக்கும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் நயன்தாரா இருக்கிறார்.

தங்கம் வாங்க சொல்லும் விளம்பரங்களில் நயன்தாரா, திரிஷா, தமன்னா, கீர்த்தி சுரேஷ் தோன்றினால், தங்கம் விற்க ரம்யா கிருஷ்ணன், சுகன்யா போன்றவர்கள் முகம் காட்டுகிறார்கள்.

வீடு, மனை வாங்கும் விளம்பரங்களில் சுஹாசினி, குஷ்பு போன்றோர் வருகிறார்கள்.

மக்கள் எந்த வகை சோப், டூத் பேஸ்ட் பயன்படுத்த வேண்டும் என்பதை சமந்தா, காஜல் அகர்வால் சொல்கிறார்கள். ராஷ்மிகாவும் முன்னணி நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடிக்கிறார்.

டி.வி. விளம்பரங்கள் மூலம் பல சினிமா நட்சத்திரங்கள் வருமானத்தை பெருக்கி வரும் அதே வேளையில், சில நடிகைகளுக்கு சோஷியல் மீடியாவில் லட்சக்கணக்கில் `பாலோயர்ஸ்' இருப்பதால் மறைமுகமாக அங்கும் கடை பரப்பி வசூல் பார்த்து விடுகிறார்கள்.

சினிமா பிரபலங்கள் விளம்பரங்களில் நடித்து பணம் ஈட்டுவது நல்ல விஷயமே. அதே சமயம் ஒரு விளம்பர படம் சிறியவர் முதல் பெரியவர் வரை வெகு சீக்கிரத்தில் சென்றடையும் என்பதால் சமூக பொறுப்புடன் நடித்தால் நாடு நலம் பெறும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

மேலும் செய்திகள்