இந்திக்கு போகும் நடிகைகள்
|நடிகைகள் இந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறனர். சுருதிஹாசன் இந்தி படங்களில் நடித்துள்ளார். சமந்தாவுக்கு பேமிலிமேன்-2 இந்தி வெப் தொடரில் நடித்த பிறகு இந்தி பட வாய்ப்புகள் வந்துள்ளன. இந்தியில் கதை கேட்டு வருவதாகவும் விரைவில் அவர் நடிக்க உள்ள படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
நயன்தாராவும் இந்திக்கு சென்றுள்ளார். அட்லி இயக்கத்தில் தயாராகி வரும் ஜவான் இந்தி படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்து வருகிறார். சாய்பல்லவிக்கும் இந்தி வாய்ப்பு வந்துள்ளது. இந்தியில் ராமாயண கதையை மையமாக வைத்து புதிய படம் தயாராக உள்ளது. இதில் ராமராக ரன்பீர் கபூர் நடிக்கிறார். ராவணனாக நடிக்க ஹிருத்திக் ரோஷன் பெயர் அடிபடுகிறது. மது மந்தேனா டைரக்டு செய்கிறார்.
இந்த படத்தில் சீதை வேடத்தில் நடிக்க சாய்பல்லவியிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சாய்பல்லவி இதுவரை இந்தி படங்களில் நடிக்கவில்லை. ராமாயணம் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் பான் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர்.