திருமணத்துக்கு தயாராகும் நடிகைகள்
|உலக அழகியோ, உள்ளூர் அழகியோ யாராக இருந்தாலும் குறிப்பிட்ட காலத்தில் இல்லற வாழ்க்கையில் இணைவது நடைமுறை. அப்படி மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போதே அம்பிகா, ராதா, நதியா, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், ரம்பா, ரோஜா, சிம்ரன், ஷாலினி, ஜோதிகா, நமீதா போன்ற முன்னணி நடிகைகள் திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளை பெற்றெடுத்து, வளர்த்து ஆளாக்கி வெற்றிகரமான குடும்ப வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.
அந்த வரிசையில் 2 கே கிட்ஸ்களின் பல அபிமான நடிகைகள் இப்போது திருமணத்துக்கு தயாராகி வருகிறார்கள். அப்படி திருமணத்துக்கு தயாராகும் சில நடிகைகளின் விவரம்:
சுருதிஹாசன்
தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த கலைஞனான கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன். நடிகை, பாடகி என பன்முகத் தன்மை கொண்ட இவருக்கும், பிரபல `டூடூடல்' கலைஞரான சாந்தனு அசாரிகாவுக்கும் சில ஆண்டு களுக்கு முன் காதல் மலர்ந்தது. மும்பையில் வசிக்கும் இந்த ஜோடி விரைவில் தங்கள் திருமண தேதியை அறிவிக்க உள்ளார்கள்.
தமன்னா
சுமார் இருபது ஆண்டுகளாக தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பிரபல இந்தி நடிகர் விஜய் வர்மாவை திருமணம் செய்து கொள்ளபோகிறார்.
அனுஷ்கா
அறிமுகம் தேவைப்படாத நடிகை அனுஷ்காவுக்கு பிரபாசுடன் காதல். இந்த ஜோடி தங்கள் காதலை வெளிப் படையாக அறிவிக்கவில்லையென்றாலும், இருவரும் சினிமாவைத் தாண்டி அதிகம் நட்பு பாராட்டி வருகிறார்கள். இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று வலுவான கிசுகிசு உள்ளது.
ராஷ்மிகா மந்தனா
விஜய் நடித்த `வாரிசு' மூலம் தமிழில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. இவருக்கும் தெலுங்கில் முன்னணி நடிகராக விளங்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் காதல் என்பது சினிமா ரசிகர்களால் மறுக்க முடியாத செய்தி. சமீபத்தில் இந்த ஜோடி மாலத்தீவு கடற்கரையில் ஒன்றாக விடுமுறையை கொண்டாடி திரும்பி உள்ளனர்.
திரிஷா
திரிஷாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நிச்சயமாகி ரத்தானது. இப்போது வயது ஏறி வருவதால் சீக்கிரம் அவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் பொருத்தமான மாப் பிள்ளையை தேடி வருகிறார்களாம்.
ரகுல் ப்ரீத்சிங்
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக இருப்பவர் ரகுல் ப்ரீத்சிங். மும்பையில் வசித்து வரும் இவர், தன்னுடைய பக்கத்துவீட்டுக்காரரும், சினிமா தயாரிப்பாளருமான ஜாக்கி பகானானியை கரம் பிடிக்க உள்ளார்.
பிரியா பவானி சங்கர்
`மேயாத மான்' படத்தில் அறிமுகமான பிரியா பவானி சங்கர் தன் திறமையால் குறுகிய காலத்தில் முன்னணி நடிகைக்கான இடத்தை பிடித்துள்ளார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே ராஜவேல் என்பவரை பத்து வருடமாக காதலித்து வருகிறார். சமீபத்தில் தன் காதலையும், காதலரையும் வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தினார். அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.
விமலா ராமன்
கே.பாலசந்தர் கடைசியாக இயக்கிய `பொய்' படத்தில் அறிமுகமானவர் விமலா ராமன். இவர் `உன்னாலே உன்னாலே' படத்தில் அறிமுகமான வினய்யை தீவிரமாக காதலித்து வருகிறார். `இருவீட்டாரின் சம்மதத்துடன் எங்கள் திருமணம் நடக்க உள்ளது. நல்ல செய்தி சீக்கிரத்தில் வரும்' என்று வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்கள்.
அஞ்சலி
தற்போது ஐம்பதாவது படத்தை நெருங்கியுள்ள அஞ்சலி நீண்ட காலமாக ஜெய்யை காதலித்து வருகிறார் என்பது ஊர் அறிந்த ரகசியம். இருவரும் வெளிப் படையாக தங்கள் காதலை அறிவிக்கவில்லையென்றாலும் அவர்களின் காதல் புனிதமானது என்று அவர்களை நன்கு அறிந்த நண்பர்கள் வட்டாரம் கிசுகிசுக்கிறது.
திருமணத்துக்கு காத்திருக்கும் இந்த நடிகைகள் பட்டியலில் மறுமணத்துக்கு தயாராகும் நடிகைகளும் அடங்குவார்கள். அதன்படி, சமந்தா, அமலாபால், மீனா, சோனியா அகர்வால் உட்பட பல நடிகைகள் மறுமணம் செய்துகொள்ளும் முடிவில் இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.