< Back
சினிமா செய்திகள்
நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு என்.ஐ.ஏ. சம்மன்..!
சினிமா செய்திகள்

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு என்.ஐ.ஏ. சம்மன்..!

தினத்தந்தி
|
29 Aug 2023 3:43 PM IST

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னை,

கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப் பொருள்கள் மற்றும் ஆயுதங்களை கடத்திய குற்றச்சாட்டில் ஆதிலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார். போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய தலைவரான குணசேகரன் என்பவருடன் ஆதிலிங்கம் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

ஆதிலிங்கம் என்பவர் நடிகை வரலட்சுமியின் முன்னாள் உதவியாளர் என்பதும், போதைப் பொருள் கடத்தலில் கிடைக்கும் பணத்தை சினிமாவில் ஆதிலிங்கம் முதலீடு செய்துள்ளது என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், ஆதிலிங்கம் குறித்த தகவல்களை திரட்டுவதற்காக நடிகை வரலட்சுமி சரத்குமார் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சம்மன் அனுப்பியுள்ளது. தற்போது ஆந்திராவில் படப்பிடிப்பில் இருப்பதால், உடனடியாக விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று நடிகை வரலட்சுமி என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்