நடிகை வரலட்சுமி திருமண நிச்சயதார்த்தம்
|உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் வரலட்சுமி - நிகோலஸ் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.
மும்பை,
'போடா போடி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் வரலட்சுமி சரத்குமார். தொடர்ந்து 'தாரை தப்பட்டை', 'விக்ரம் வேதா', 'சண்டக்கோழி-2', 'சர்க்கார்', 'மாரி-2', உள்ளிட்ட பல படங்களில் வரலட்சுமி நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
தற்போது தனுஷ் இயக்கி நடித்து வரும் 'ராயன்', மலையாளத்தில் 'கலர்ஸ்', தெலுங்கில் தயாராகி வரும் 'சபரி' உள்ளிட்ட படங்களில் வரலட்சுமி நடித்து வருகிறார். வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் நிகோலய் சச்தேவுக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் திருமண நிச்சயதார்த்த விழா மும்பையில் நேற்று (மார்ச் 1) நடைபெற்றது.
இதில் வரலட்சுமியின் தந்தை நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா மற்றும் குடும்பத்தினரும், நிகோலய் சச்தேவ் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர். விழாவில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் வரலட்சுமி - நிகோலஸ் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். இந்த ஆண்டு திருமணம் நடைபெறும் என்றும், திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரலட்சுமி - நிகோலஸ் சச்தேவ் ஜோடிக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.