முத்த காட்சியில் நடித்ததை கேலி செய்தவர்களுக்கு நடிகை தமன்னா பதிலடி
|நடிகை தமன்னா சினிமாவில் அறிமுகமான ஆரம்ப கால கட்டத்தில் முத்த காட்சிகள், படுக்கை அறை காட்சிகளில் ஒருபோதும் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ஆகிய வெப் தொடர்களில் படு கவர்ச்சியாகவும், முத்த காட்சிகள், படுக்கை அறை காட்சிகளிலும் துணிச்சலாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இதற்கு வலைதளத்தில் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. இந்திய கலாசாரத்துக்கு எதிராக இப்படி நடிக்கலாமா? பணத்துக்காக ஆபாசமாக நடிப்பது முறையா? என்று பலரும் கண்டித்து வருகிறார்கள். இதற்கு தமன்னா பதிலடி கொடுத்து இருக்கிறார்.
இதுகுறித்து தமன்னா கூறும்போது, "எனது 18 வருட சினிமா வாழ்க்கையில் முத்த காட்சிகள் மற்றும் படுக்கை அறை காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக இருந்தது உண்மைதான். அதே முடிவில் இப்போதும் இருக்க வேண்டுமா? என்று யோசித்தேன். இன்னும் வளர வேண்டுமானால் அந்த முடிவை மீற வேண்டும் என்று உணர்ந்தேன்.
அதனால்தான் எனக்கு நானே விதித்திருந்த கட்டுப்பாடுகளை மீறி முத்த காட்சி, படுக்கை அறை காட்சிகளில் நடித்தேன். 2023 காலகட்டத்தில் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று மற்றவர்கள் சொல்ல தேவை இல்லை. என்னைப்பற்றி நிறைய பேர் கேலி செய்கிறார்கள். அவர்களை நான் கண்டுகொள்ள மாட்டேன்'' என்றார்.