< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற நடிகை தமன்னா...!!!
|3 Sept 2023 9:31 PM IST
பிரபல நடிகை தமன்னா மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
மாலே,
தமன்னா 16 வயதிலேயே சினிமாவுக்கு வந்து பிரபல நடிகையாக உயர்ந்தார். தமிழில் விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களோடு நடித்துள்ள தமன்னா, தற்போது ரஜினிகாந்த் உடன் 'ஜெயிலர்' படத்திலும் நடித்துள்ளார்.
'ஜெயிலர்' படத்தில் தமன்னா ஆடிய காவாலயா பாடல் சமீபத்தில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. முன்னதாக நடிகை தமன்னா மற்றும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா இடையே காதல் என பேசப்பட்டது. பின்னர் கிசுகிசுக்கப்பட்ட காதல் விவகாரத்தை தமன்னாவே உறுதி செய்து அறிவித்தார்.
தற்போது நடிகை தமன்னா மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.அங்கு விதவிதமாக வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவைகள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.