கடவுளை அவமதித்ததாக நடிகை டாப்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு
|தமிழில் தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் நடித்து அறிமுகமானவர் டாப்சி. ஆரம்பம், வந்தான் வென்றான், காஞ்சனா-2, கேம் ஓவர் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இந்தியில் பிரபல நடிகையாக உயர்ந்துள்ளார். அங்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் வருகின்றன. சம்பளமும் அதிகம் வாங்குகிறார்.
இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியொன்றில் டாப்சி கலந்து கொண்டார். அப்போது அவர் கவர்ச்சியாக அரைகுறை உடை உடுத்தி இருந்தார். அதோடு கழுத்தில் மகாலட்சுமி அம்மன் உருவத்துடன் கூடிய நெக்லஸ் அணிந்து இருந்தார்.
இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. கவர்ச்சி ஆடையில் கடவுள் உருவம் பொறித்த நெக்லசை எப்படி அணியலாம் என்று வலைத்தளத்தில் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இந்து கடவுளை அவமதித்து விட்டதாகவும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இது பரபரப்பாகி உள்ளது.