< Back
சினிமா செய்திகள்
நடிகை டாப்சி கோபம்
சினிமா செய்திகள்

நடிகை டாப்சி கோபம்

தினத்தந்தி
|
17 Sept 2022 11:31 AM IST

விருது விழா நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற டாப்சியிடம் டோபரா படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் வருகிறதே என்று ஒருவர் கேள்வி எழுப்ப கடுப்பான டாப்சி, முதலில் படத்தை பார்த்துவிட்டு பேசுங்கள் என்றார்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த டாப்சி இந்திக்கு போய் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். சர்ச்சை கருத்துகள் வெளியிட்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். கோவா பட விழாவில் ஆங்கிலத்தில் பேசிய டாப்சியிடம் நீங்கள் இந்தி படங்களில் நடிப்பதால் இந்தியில் பேசுங்கள் என்று ஒருவர் சொன்னதும், நான் தமிழ் படத்தில் நடித்து இருக்கிறேன். தமிழில் பேசவா என்று சொல்லி பதிலடி கொடுத்தார். டாப்சி நடித்துள்ள டோபரா இந்தி படம் கடந்த மாதம் வெளியாகி எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது விருது விழா நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற டாப்சியிடம் டோபரா படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் வருகிறதே என்று ஒருவர் கேள்வி எழுப்ப கடுப்பான டாப்சி, முதலில் படத்தை பார்த்துவிட்டு பேசுங்கள் என்றார். மீண்டும் இதே கேள்வியை கேட்டதால் டாப்சி கோபமானார். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே டாப்சி ஏன் சத்தம் போடுகிறீர்கள். பிறகு நடிகர்கள் தவறானவர்கள் என்பீர்கள். எந்த படம்தான் விமர்சனங்களை எதிர்கொள்ளவில்லை. நன்றாக யோசித்து கேள்வியை கேளுங்கள்" என்று காட்டமாக கூறினார். இது பரபரப்பாகி உள்ளது. தோல்வியை டாப்சியால் ஜீரணிக்க முடியாமல் கோபத்தை காட்டுகிறார் என்று வலைத்தளங்களில் பேச தொடங்கி உள்ளனர்.

மேலும் செய்திகள்