< Back
சினிமா செய்திகள்
விஜய் தேவரகொண்டா படத்தில் இருந்து விலகுகிறாரா ஸ்ரீ லீலா?

image courtecy:instagram@sreeleela14

சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டா படத்தில் இருந்து விலகுகிறாரா ஸ்ரீ லீலா?

தினத்தந்தி
|
16 April 2024 8:52 AM IST

விஜய் தேவரகொண்டாவின் 12-வது படத்தில் நடிக்க ஸ்ரீ லீலா ஒப்பந்தமாகினார்.

சென்னை,

தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் ஸ்ரீ லீலா. இவர் முன்னதாக ரவி தேஜாவின் தமாகா படத்தில் நடித்தார். பின்னர், ஸ்கந்தா படத்தில் நடித்தார். இந்த படங்கள் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதனால் இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் குறைந்தன.

சமீபத்தில், மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரம் படத்தில் ஸ்ரீ லீலா நடித்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் வரும் குர்ச்சி மடத்தபெட்டி பாடல் மிகவும் பிரபலமானது. அதனைதொடர்ந்து விஜய் தேவரகொண்டாவின் 12-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகினார்.

இந்நிலையில், இப்படத்தில் இருந்து ஸ்ரீ லீலா விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கல்வியில் கவனம் செலுத்த உள்ளதால் படம் நடிப்பதில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக கூறப்படுகிறது. படிப்பை முடித்துவிட்டு மீண்டும் நடிக்க உள்ளதாக தெரிகிறது.

மேலும் செய்திகள்