< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
பட வாய்ப்புக்காக நடிகை சிறப்பு பூஜை
|4 April 2023 7:40 AM IST
நடிகைகள் பலரும் சமீப காலமாக கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்வதையும், சாமியார்களை சந்திப்பதையும், ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்டு செயல்படுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
பட வாய்ப்புகளுக்காகவும், நல்ல கணவன் அமையவும் இதை செய்வதாக பட உலகினர் கூறுகிறார்கள். இதில் தற்போது நடிகை நிதி அகர்வாலும் இணைந்துள்ளார். ஆந்திராவில் உள்ள பிரபல ஜோதிடர் ஒருவரை வைத்து நிதி அகர்வால் சிறப்பு பூஜை மற்றும் யாகங்கள் செய்துள்ளார். அவர் பூஜை செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
முன்னணி நடிகைகள் மாதிரி தனக்கும் அதிக பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த சிறப்பு பூஜையை அவர் செய்ததாக கூறப்படுகிறது. நிதி அகர்வால் தமிழில் ஈஸ்வரன், பூமி, கலகத் தலைவன் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கிலும் பிரபல நடிகையாக இருக்கிறார்.