வீட்டை விற்கும் நடிகை சோனாக்சி சின்ஹா... இத்தனை கோடியா?
|நடிகை சோனாக்சி சின்ஹா சமீபத்தில் இந்தி நடிகர் ஜாகீர் இக்பாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா. இவர் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். கடந்த 2010-ம் ஆண்டு வெளியான தபாங் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 14 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக 'லிங்கா' படத்தில் நடித்திருந்தார்.
இவர் நடிகர் ஜாகீர் இக்பாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சொந்தமாக மும்பை பாந்த்ரா பகுதியில் அடுக்குமாடி சொகுசு வீடு ஒன்று உள்ளது. இந்த வீடு சுமார் 4 ஆயிரத்து 500 சதுர அடியில் அமைந்துள்ளது. நடிகை சோனாக்சி சின்ஹா தற்போது இந்த வீட்டை விற்பதாக முடிவு செய்துள்ளார்.
இந்த வீட்டில் இருந்து பார்த்தால் மஹீம் கடற்கரை நன்றாக தெரியுமாம். வீட்டிற்குள் சுமார் ரூ.5 கோடி செலவில் உள்கட்டமைப்பு வேலைகளும் செய்யப்பட்டு உள்ளன. வீட்டிற்கு ரூ.25 கோடி வரை விலை நிர்ணயம் செய்து விளம்பரம் வெளியிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமணமான சில நாட்களிலேயே சோனாக்சி சின்ஹா அவரது வீட்டை விற்க என்ன காரணம் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.