< Back
சினிமா செய்திகள்
கவர்ச்சி நடிகை என்பதால் திருமணம் நடக்கவில்லை - நடிகை சோனா வருத்தம்
சினிமா செய்திகள்

கவர்ச்சி நடிகை என்பதால் திருமணம் நடக்கவில்லை - நடிகை சோனா வருத்தம்

தினத்தந்தி
|
17 Oct 2023 6:41 AM IST

கவர்ச்சி நடிகை என்பதால் திருமணம் நடக்கவில்லை என்று நடிகை சோனா வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிரபல கவர்ச்சி நடிகை சோனா தனது வாழ்க்கையை 'ஸ்மோக்' என்ற பெயரில் வெப் தொடராக எடுத்துள்ளார். அவரே இதில் நடித்து இயக்கி உள்ளார்.

இதுகுறித்து சோனா அளித்துள்ள பேட்டியில், "எனது 23 ஆண்டு சினிமா பயணத்தில் நிறைய ஏற்ற, இறக்கம், சந்தோஷம், சோகம் ஏன் மரண அடி கூட வாங்கியிருக்கிறேன். ஆனாலும் ஒவ்வொரு கட்டத்திலும் என்னை நானே உறுதியாக்கி நகர்ந்தேன்.

என்னை கவர்ச்சி நடிகை என்றுதான் அழைக்கிறார்கள். அதற்கு காரணம் நான்தான். அது தவறு என்று சொல்லவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் அந்த பெயர் எனக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் இந்த அடையாளத்தால் எனக்கு திருமணம் நடக்கவில்லை. ஒரு கருத்தை சொன்னால் கூட, 'இவளே அப்படி... கருத்து சொல்ல வந்துட்டா...' என்று பேசுவார்கள்.

நான் கவர்ச்சி நடிகை என்பது திரையில் மட்டும்தான். மற்றபடி நானும் ஒரு பெண்தான்.

ஒரு கட்டத்தில் என் நிஜ வாழ்க்கையை படமாக்க முடிவு செய்து வெப் தொடராக உருவாக்கி இருக்கிறோம். ஸ்மோக் என்று பெயரிட்டுள்ளோம். என் வலிகளை உள்ளடக்கிய படம் இது.

'கவர்ச்சி நடிகை தானே.. இவ என்ன படம் எடுத்துவிட போகிறாள்?', என்ற கேள்வி எழுந்தது. ஆனால் என் டீம் எனக்கு உறுதுணையாக இருந்தனர். 4 மொழிகளில் 130-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். என்னை இயக்கிய அனைத்து இயக்குனர்களுக்கும் இந்த படத்தை சமர்ப்பிக்கிறேன்.

ஸ்மோக் வெப் தொடரில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நான் சந்தித்த பல உண்மை சம்பவங்கள் சொல்லப்பட்டு உள்ளன. இது ஒரு எமோஷனல் கதை'' என்றார்.

மேலும் செய்திகள்