< Back
சினிமா செய்திகள்
ரூ.4 கோடிக்கு கார் வாங்கிய நடிகை ஸ்ரத்தா கபூர்...!

Image Credits : Instagram.com/shraddhakapoor

சினிமா செய்திகள்

ரூ.4 கோடிக்கு கார் வாங்கிய நடிகை ஸ்ரத்தா கபூர்...!

தினத்தந்தி
|
27 Oct 2023 10:51 AM IST

பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர் லம்போர்கினி சொகுசு காரை வீதிகளில் ஓட்டிச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகை ஸ்ரத்தா கபூர் ரூ.4 கோடி மதிப்புள்ள லம்போர்கினி சொகுசு காரை வாங்கி உள்ளார். காருடன் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார். காருக்கு விசேஷ பூஜைகளும் செய்தார். பின்னர் காரை மும்பை வீதிகளில் ஓட்டிச்சென்றார். இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகிறது.

ஸ்ரத்தா கபூர் மூத்த இந்தி நடிகரான சக்திகபூர் மகளாக ஆஷிக்கி 2 என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப்படம் வெற்றி பெற்றதால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. ஸ்ரத்தா நடித்த ஹைதர், பாகி, ஏ பி சி டி உள்ளிட்ட படங்கள் பெரிய வெற்றியை பெற்றன. தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியான சாஹோ படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்து மேலும் பிரபலமானார். அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலிலும் இருக்கிறார்.

மேலும் செய்திகள்