நடிகை ஷில்பா ஷெட்டியின் வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் கொள்ளை
|இந்தி திரைப்பட நடிகை ஷில்பா ஷெட்டியின் வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளன.
புனே,
இந்தி திரையுலகில் ஜொலித்த நடிகை ஷில்பா ஷெட்டியின் வீடு மும்பை ஜுகு பகுதியில் அமைந்து உள்ளது. இவரது பிறந்த நாள் கடந்த வாரம் 8-ந்தேதி வந்தது.
அதனை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன், பிறந்த நாளை கொண்டாட இத்தாலி நாட்டுக்கு அவர் சுற்றுலா சென்று உள்ளார்.
இந்த நிலையில், கடந்த வாரம் அவரது வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன.
இதுபற்றிய புகாரின் பேரில் ஜுகு காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக, போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வந்த அவர், 2021-ம் ஆண்டு வெளியான ஹங்காமா 2 படத்தில் தோன்றினார். ஆனால், அந்த படம் பாக்ஸ் ஆபீசில் வசூலை ஈட்டவில்லை.
அதன்பின்பு, நிக்கம்மா படத்தில் நடித்து உள்ளார். அடுத்து, ஓ.டி.டி.யில் வெளிவர கூடிய ரோகித் ஷெட்டியின் இந்திய போலீஸ் போர்ஸ் என்ற தொடரில் அவர் நடித்து வருகிறார்.