"என் மீது செருப்பை கழற்றி வீசினார்" - நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் பரபரப்பு பேட்டி
|பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவரை விவாகரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் மிஸ்டர் ரோமியோ, குஷி படங்களில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகையான ஷில்பா ஷெட்டி கடந்த 2009-ல் தொழில் அதிபர் ராஜ்குந்த்ராவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
2021-ல் நடிகைகளை வைத்து நிர்வாண படங்கள் எடுத்த புகாரில் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு மாதங்கள் சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்துள்ள ராஜ்குந்த்ரா தனது வாழ்க்கையை 'யூடி 69' என்ற பெயரில் சினிமா படமாக எடுத்துள்ளார்.
இந்த நிலையில் ராஜ்குந்த்ரா வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாங்கள் பிரிந்து விட்டோம். இந்த கடினமான நேரத்தில் தயவு செய்து எங்களுக்கான நேரத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டு உள்ளார். இதன் மூலம் இருவரும் விவாகரத்து செய்து விட்டார்களா? அல்லது வேறு காரணத்துக்காக இந்த பதிவா? என்று பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ரசிகர்களும் இருவரும் பிரிந்து விட்டீர்களா? இது அதிர்ச்சியான தகவல் என்று பதிவுகள் வெளியிட்டு உள்ளனர்.
இந்த நிலையில் மும்பையில் பேட்டி அளித்த ராஜ்குந்த்ரா "நான் சினிமாவில் நடிக்க போகிறேன் என்று ஷில்பா ஷெட்டியிடம் சொன்னதும் செருப்பை கழற்றி என் மீது வீசி எறிந்தார். இதில் நான் அதிர்ச்சியடைந்தேன்'' என்றார்.