< Back
சினிமா செய்திகள்
நடிகை ஷாலு ஷம்மு சலிப்பு
சினிமா செய்திகள்

நடிகை ஷாலு ஷம்மு சலிப்பு

தினத்தந்தி
|
2 April 2023 6:40 AM IST

தமிழில் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தவர் ஷாலு ஷம்மு. நகுலுடன் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்தார். அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன.

இதனால் இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் கவர்ச்சி வேடம் ஏற்றார். திருட்டு பயலே 2, மிஸ்டர் லோக்கல் படங்களிலும் நடித்து இருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். காதலர் தினத்தில் அரைகுறை ஆடையில் பூங்கொத்தால் உடலை மறைத்தபடி வெளியிட்ட புகைப்படம் வலைத்தளத்தில் வைரலானது. இதனாலேயே அவரை வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.

இந்த நிலையில் ஷாலு ஷம்மு தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு சலிப்பாக இருக்கிறது என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியாகி ஷாலுவுக்கு வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட என்ன நடந்தது என்று கேள்வி எழுப்பியும், சலிப்படைய வேண்டாம் என்று ஆலோசனை வழங்கியும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்