தயாரிப்பாளர் மீது நடிகை பாலியல் புகார்
|பிரபல இந்தி நடிகை ஜெனிபர் மிஸ்ட்ரி பன்சிவால். இவர் ஹல்லா போல், கிராஸி 4, ஏர்லிபட் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். டி.வி தொடர் படப்பிடிப்பில் தனக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டதாக ஜெனிபர் மிஸ்ட்ரி பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் தாரக் மேத்தா கா ஊல்தா சாஸ்மா என்ற தொடரில் நடித்தபோது பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டேன். அந்த தொடரின் தயாரிப்பாளர் அசித்மோடி மற்றும் இரண்டு பேர் என்னிடம் தவறாக நடக்க முயன்றனர். ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தினர். நான் உடன்படவில்லை.
தயாரிப்பாளர் பலமுறை என்னை ஆசைக்கு இணங்க அணுகினார். தொடரில் இருந்து நீக்கி விடுவார்கள் என்று பொறுமையாக இருந்தேன். கடைசியாக வேறு வழி இல்லாமல் அந்த தொடரில் இருந்து வெளியேறினேன். சில பெண்கள் அவர்களின் விருப்பங்களுக்கு இணங்கினர். தொடரில் வேலை பார்த்த எல்லோரையும் கொத்தடிமைபோல் நடத்தினர்'' என்றார். இது பரபரப்பாகி உள்ளது.