< Back
சினிமா செய்திகள்
சண்டைகாட்சியில் பிரபல நடிகை காயம் - மருத்துவமனையில் அனுமதி
சினிமா செய்திகள்

சண்டைகாட்சியில் பிரபல நடிகை காயம் - மருத்துவமனையில் அனுமதி

தினத்தந்தி
|
29 July 2022 2:55 PM IST

படப்பிடிப்பின் போது சண்டைகாட்சியில் நடித்த பிரபல நடிகை காயம் அடைந்தார் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

பெங்களூரு

கன்னட திரையுலகின் இளம்நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் கன்னட பிக்பாக்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர். இவர் தமிழில் நடிகர் ஜெயம்ரவியுடன் கோமாளி, மன்மதலீலை, பப்பி உள்ளிட்ட படங்களிலும், கன்னடத்தில் கிரிக்பார்ட்டி, காலேஜ் குமார் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். பெங்களூருவில் வசித்து

வரும் அவர் தற்போது கன்னட இயக்குனர் அபிஷேக் வசந்த் இயக்கத்தில் கிரீம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு கன்டீரவா ஸ்டூடியோவில் நேற்று நடைபெற்றது. அப்போது ஒரு சண்டை காட்சியில் நடிகை சம்யுக்தா ஹெக்டே கலந்துகொண்டு நடித்தார். அந்த சமயத்தில் அவர் காலில் தசைபிடிப்பு ஏற்பட்டு தவறி கீழே விழுந்தார்.

இதில் காயமடைந்த அவரை படக்குழுவினர் மீட்டு பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து கிரீம் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்