குழந்தைகளை தத்தெடுக்கும் நடிகை சமந்தா?
|சமந்தா கடந்தாண்டு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
சென்னை,
பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, 24, மெர்சல் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சமந்தா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
சமந்தா கடந்தாண்டு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் இந்த நோயிலிருந்து படிப்படியாக குணமடைந்த அவர், தற்போது படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மயோசிட்டிஸ் நோய்க்காக மீண்டும் சிகிச்சை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் சமந்தா ஆதரவில்லாமல் இருக்கும் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா தான் நடத்தி வரும் பிரதியுஷா என்ற தொண்டு நிறுவனம் மூலம் குழந்தைகளை தத்தெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2021-ல் அவரைப் பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.