மருத்துவ சிகிச்சைக்காக நடிகை சமந்தா அமெரிக்காவுக்கு பயணம்
|பான் இந்தியா ஸ்டாராக கலக்கி வரும் சமந்தாவுக்கு 'மயோசிடிஸ்' என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு தீவிரமாகி இருக்கிறது. இதற்காக அவர் சிறிது காலம் சினிமாவை விட்டு விலகி சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளார். ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களுக்கு வாங்கிய 'அட்வான்ஸ்' தொகையையும் அவர் திருப்பி தந்துள்ளார்.தெலுங்கில், விஜய் தேவரகொண்டா ஜோடியாக அவர் நடித்த 'குஷி' படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. பட விழாவில் கலந்துகொண்ட சமந்தா, "ரசிகர்களின் அன்பு தான் எனக்கு உயிர். எனவே இப்போது சிகிச்சைக்கு செல்கிறேன். புது உற்சாகத்துடன் திரும்புவேன். நோயில் இருந்து குணம் அடைந்தவுடன் முன்புபோலவே படங்களில் நடித்து உங்களை குஷிப்படுத்துவேன்'' என்று உருக்கமாக பேசியிருந்தார்.
இதற்கிடையில் 'மயோசிடிஸ்' நோய் சிகிச்சைக்காக, ஐதராபாத்தில் இருந்து அமெரிக்காவுக்கு சமந்தா விமானத்தில் புறப்பட்டு சென்றார். அங்கு நியூயார்க்கில் உள்ள முன்னணி மருத்துவமனையில் சமந்தா சிகிச்சை பெற இருக்கிறார்.சிகிச்சைக்காக அவர் பல மாதங்கள் அமெரிக்காவில் தங்கியிருப்பார் என்றும், அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பினாலும், அவ்வப்போது பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அவர் வரவேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.நோய் பாதிப்பில் இருந்து விடுபட்டு முன்புபோல திரையில் ஜொலிக்க வேண்டும் என சமந்தா ரசிகர்கள் எதிர்பார்ப்பு கொண்டுள்ளனர்.