< Back
சினிமா செய்திகள்
நடிகை சமந்தா மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி
சினிமா செய்திகள்

நடிகை சமந்தா மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி

தினத்தந்தி
|
14 Oct 2023 7:46 AM IST

சமந்தா மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் பரவி வருகிறார்கள்.

நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதற்காக ஏற்கனவே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதில் உடல்நிலை சற்று தேறிய நிலையில் மீண்டும் படப்பிடிப்புகளில் பங்கேற்று நடித்தார்.

சமீபத்தில் படப்பிடிப்பில் இருந்து கொஞ்சம் ஓய்வு எடுக்கப்போவதாக அறிவித்தார். அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சமந்தா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது போன்ற ஒரு புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூஸ்டரின் பயன்கள் குறித்து சமந்தா வெளியிட்டுள்ள பதிவில், " இது வெள்ளை அணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு மண்டல செயலை மேம்படுத்தும், தசைகள், எலும்புகளை வலுவாக்கும், இதயத்தை சரியாக செயல்பட வைக்கும். வைரஸ்களை எதிர்த்து போராடும். நரம்பு வழி ஊட்டச்சத்து என்பது ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கான வழிமுறை'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதன் மூலம் சமந்தா மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் பரவி அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்