நடிகை சாயிஷாவின் புத்தாண்டு ஆசைகள்
|2023-ம் ஆண்டு நாம் விரும்புகிறவர்களோடு செலவிடும் ஆண்டாகவும் புத்தாண்டு அமையட்டும் என்று நடிகை சாயிஷா கூறியுள்ளார்.
தமிழில் 'கடைக்குட்டி சிங்கம்,' 'ஜுங்கா,' 'கஜினிகாந்த்,' 'காப்பான்', 'டெடி' ஆகிய படங்களில் நடித்துள்ள சாயிஷா தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் புத்தாண்டை வரவேற்கும் புதிய ஆசைகளோடு சாயிஷா வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "2022-ம் ஆண்டு எனக்கு தேவையானதை எல்லாம் கொடுத்தது. மகிழ்ச்சி, மன நிறைவோடு இருந்தேன். இந்த ஆண்டை மறக்காமல் நன்றியோடு இருப்பேன். உங்கள் குழந்தையோடு ஒவ்வொரு நொடியும் செலவிடுவதுதான் அந்த குழந்தைக்கு நீங்கள் கொடுக்கும் சிறந்த பரிசு. நான் எனது குழந்தையுடன் நீண்ட நேரம் செலவிட்டேன் என்பதில் பெருமை. இந்த ஆண்டின் பயணம் எனக்கு அழகான மகிழ்ச்சியான பயணமாக இருந்தது. சூப்பர் 2023-ம் ஆண்டு வருகிறது. இந்த ஆண்டு நிறைவான மகிழ்ச்சியை கொடுக்கட்டும். நல்ல ஆரோக்கியத்தோடு இருப்போம். நாம் விரும்புகிறவர்களோடு செலவிடும் ஆண்டாகவும் புத்தாண்டு அமையட்டும்'' என்று கூறியுள்ளார்.