விருப்பமில்லாத காட்சியில் நடித்ததற்காக நடிகை சதா வருத்தம்
|தமிழ், தெலுங்கில் 'ஜெயம்' படத்தில் அறிமுகமான சதா தொடர்ந்து தமிழில் 'அந்நியன்', 'பிரியசகி', 'திருப்பதி', 'உன்னாலே உன்னாலே' உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.
சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கி இருந்த அவர் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளார். இந்த நிலையில் தேஜா இயக்கத்தில் அறிமுகமான ஜெயம் தெலுங்கு படத்தில் மோசமான காட்சியொன்றில் நடித்ததற்காக வருத்தப்படுவதாக தெரிவித்து உள்ளார்.
அந்த படத்தில் சதா கன்னத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த் தனது நாக்கால் நக்குவது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது. "அந்த காட்சியில் நடித்ததற்காக இப்போதுவரை வேதனைப்படுகிறேன். அப்படி நடிக்க மாட்டேன் என்று இயக்குனரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை. அந்த காட்சி படத்துக்கு முக்கியம் என்று சொல்லி படமாக்கி விட்டார்.
அந்த காட்சி எடுத்த பிறகு வீட்டுக்கு சென்று நிறைய நேரம் அழுதேன். என் முகத்தை மீண்டும் மீண்டும் கழுவிக்கொண்டேன். இப்போதுகூட டி.வி.யில் அந்த காட்சி வந்தால் அதை பார்க்காமல் வெளியேறி விடுவேன்'' என்றார்.