< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்
|15 July 2024 7:12 PM IST
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் ரோஜா இன்று சாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர்,
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். கடற்கரையோரம் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு நாள்தோறும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா இன்று கோவிலுக்கு வந்தார். அவர் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது