< Back
சினிமா செய்திகள்
படப்பிடிப்பின்போது நடிகை ரித்திகா சிங் காயம்
சினிமா செய்திகள்

படப்பிடிப்பின்போது நடிகை ரித்திகா சிங் காயம்

தினத்தந்தி
|
6 Dec 2023 2:00 AM IST

கையில் ரத்த காயங்களுடன் உள்ள புகைப்படத்தை நடிகை ரித்திகா சிங் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்துக்கு 'தலைவர் 170' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அதிரடி ஆக்சனில் உருவாகும் இந்த படத்தில் அமிதாப்பச்சன், மஞ்சுவாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்பட பலர் நடிக்கின்றனர்.

கன்னியாகுமரி, மும்பையை அடுத்து தற்போது சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற ஒரு சண்டை காட்சியில் பங்கேற்ற ரித்திகா சிங்குக்கு கையில் அடிபட்டுள்ளது.

இதுகுறித்து ரித்திகா சிங் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கையில் ரத்த காயங்களுடன் உள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர், "ஓநாய் மனிதனுடன் சண்டை போட்டது போலாகி விட்டது. படப்பிடிப்பின்போது கண்ணாடி இருக்கிறது என்று அனைவருமே எச்சரித்த போதிலும், நிலைதடுமாறி அதில் விழுந்து காயமடைந்துவிட்டேன்.

கண்ணாடி துகள்கள் ஆழமாக இறங்கிவிட்டன. சிகிச்சை பெற்று முழுமையாக உடல்நலம் பெற்ற பின்னர் படப்பிடிப்பில் பங்கேற்பேன்" என்று குறிப்பிட்டுள்ளார். ரித்திகா சிங் வேகமாக குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்