பிறந்தநாளில் நடிகை ராஷிகன்னா செய்த செயல்... ரசிகர்கள் பாராட்டு...!
|நடிகை ராஷிகன்னா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
சென்னை,
தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ராஷிகன்னா. இவர் அயோக்யா, சங்க தமிழன், திருச்சிற்றம்பலம்,சர்தார் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடந்த வருடம் மட்டும் தமிழ், தெலுங்கில் 4 படங்கள் திரைக்கு வந்தன. இதில் தெலுங்கு படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. இவர் தற்போது அரண்மனை 4-ம் பாகத்திலும் சில இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ராஷிகன்னா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவர் பிறந்தநாளை முன்னிட்டு தனது தோட்டத்தில் செடிகளை நட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
அவர் அந்த பதிவில், 'என் கண்ணைப் பிரியப்படுத்த, என் ஆன்மாவைப் பிரியப்படுத்த, ஒரு சிறிய பொறுப்பை ஏற்க என நான் பல காரணங்களுக்காக மரங்கள் வளர்ப்பேன். ஆனால் முக்கியமாக மரம் வார்ப்பது எனக்கு சந்தோசத்தை கொடுக்கும். இன்று எனது பிறந்தநாளில் இந்த அற்புதமான பாரம்பரியத்தை பின்பற்றுகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.