< Back
சினிமா செய்திகள்
3-வது பங்களா வீட்டை வாங்கிய நடிகை ராஷிகன்னா
சினிமா செய்திகள்

3-வது பங்களா வீட்டை வாங்கிய நடிகை ராஷிகன்னா

தினத்தந்தி
|
6 April 2024 8:32 AM IST

நடிகை ராஷிகன்னா ஐதராபாத்தில் 3-வது பங்களா வீட்டை அதிக விலை கொடுத்து வாங்கி இருக்கிறார்.

சென்னை,

தமிழில் 'இமைக்கா நொடிகள்', 'அடங்க மறு', 'அயோக்யா', 'சிங்கத்தமிழன்', 'அரண்மனை 4' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராஷிகன்னா தெலுங்கிலும் முன்னனி நடிகையாக இருக்கிறார்.

டெல்லியை சேர்ந்தவரான ராஷிகன்னா ஐதராபாத்தில் 2015 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் இரண்டு வீடுகளை சொந்தமாக வாங்கி இருந்தார். தற்போது அங்கு 3-வது பங்களா வீட்டையும் அதிக விலை கொடுத்து வாங்கி இருக்கிறார்.

வீட்டில் குடும்பத்தினருடன் ஹோமம் நடத்தி பால் காய்த்து கிரஹப்பிரவேசம் செய்த புகைப்படங்கள் வலைதளத்தில் வெளியாகி வைரலாகின.

ராஷிகன்னாவுக்கு தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிகின்றன. இதனாலேயே ஐதராபாத்தில் அடுத்தடுத்து சொத்துகள் வாங்கி குவிப்பதாக கூறப்படுகிறது. புது வீடு வாங்கிய ராஷிகன்னாவுக்கு வலைதளத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்