ரோஜாவை சந்தித்த ரம்யா கிருஷ்ணன்
|புகைப்படங்களை ரோஜா வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
தமிழ் திரையுலகின் முன்னாள் கதாநாயகிகளான ரோஜாவும், ரம்யா கிருஷ்ணனும் சந்தித்துக்கொண்ட புகைப்படம் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகிறது. ரோஜா தற்போது ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரியாக இருக்கிறார். ரம்யா கிருஷ்ணன் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
தற்போது ரஜினியுடன் 'ஜெயிலர்' படத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில் ரோஜாவை அவரது வீட்டில் ரம்யா கிருஷ்ணன் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் பழைய நினைவுகளை பகிர்ந்து உரையாடியானார்கள். ரம்யா கிருஷ்ணன் தன்னை சந்தித்த புகைப்படங்களை ரோஜா வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், ''ரம்யாகிருஷ்ணனை சந்திப்பது எப்போதுமே மகிழ்ச்சியான விஷயமாகவே இருக்கும். அந்த காலத்தில் எங்கள் வாழ்க்கை எப்படி இருந்தது என்ற சந்தோசமான தருணங்கள் குறித்து பேசி மகிழ்ந்தோம்'' என்று நெகிழ்ச்சியான பதிவையும் பகிர்ந்துள்ளார்.