< Back
சினிமா செய்திகள்
விஜயகாந்த் உருவ படத்திற்கு மரியாதை செலுத்திய நடிகை ரம்பா
சினிமா செய்திகள்

விஜயகாந்த் உருவ படத்திற்கு மரியாதை செலுத்திய நடிகை ரம்பா

தினத்தந்தி
|
6 Feb 2024 10:23 AM IST

நடிகை ரம்பா, விஜயகாந்த் இல்லத்தில் அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

சென்னை,

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ந் தேதி உடல் நலக்குறைவினால் காலமானார்.

இவரது உடல் தே.மு.தி.க. அலுவலகத்தில் டிசம்பர் 29-ந் தேதி 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்று முதல் பல பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலர் தினந்தோறும் அங்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை ரம்பா, விஜயகாந்த் இல்லத்தில் அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

மேலும் செய்திகள்