< Back
சினிமா செய்திகள்
40 வயதில் இளமையாக காட்சி அளிக்கும் நடிகை ராதிகா பண்டித்: மீண்டும் நடிக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை
சினிமா செய்திகள்

40 வயதில் இளமையாக காட்சி அளிக்கும் நடிகை ராதிகா பண்டித்: மீண்டும் நடிக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
9 April 2024 10:56 AM IST

திருமணத்திற்கு பிறகு நடிகை ராதிகா பண்டித் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டார்.

பெங்களூரு,

கன்னட திரைஉலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ராதிகா பண்டித். இவர் நடிகர் யஷ்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிகை ராதிகா பண்டித் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டார். ஆனால் அவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் தன்னைப்பற்றிய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். 1984-ம் ஆண்டு பிறந்த அவருக்கு தற்போது 40 வயது ஆகிறது. 2 குழந்தைக்கும் தாயாகி விட்டார். இந்த நிலையில் நடிகை ராதிகா பண்டித் 'போட்டோ சூட்' நடத்தினார். அந்த புகைப்படங்களை தற்போது நடிகை ராதிகா பண்டித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்களில் தங்க நிறத்தில் சேலை அணிந்து, உடல் எடையை குறைத்து மீண்டும் இளமையாக நடிகை ராதிகா பண்டித் காட்சி தருகிறார். இதனால் அவர் மீண்டும் திரைஉலகிற்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். தற்போது நடிகை ராதிகா பண்டித்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்