< Back
சினிமா செய்திகள்
நீ சினிமாவில் கவனம் செலுத்து... நான் பார்த்துக் கொள்கிறேன்: கணவர் குறித்து மனம் திறந்த பிரியாமணி
சினிமா செய்திகள்

நீ சினிமாவில் கவனம் செலுத்து... நான் பார்த்துக் கொள்கிறேன்: கணவர் குறித்து மனம் திறந்த பிரியாமணி

தினத்தந்தி
|
17 April 2024 8:48 AM IST

முஸ்தபா ராஜ் என்பவரை பிரியாமணி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த பிரியாமணி 'பருத்திவீரன்' படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். 40 வயதை கடந்தும் பிரியாமணி கதாநாயகியாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். 'மைதான்' என்ற இந்தி படத்தில் நடித்தும் பாராட்டு பெற்றுள்ளார்.

முஸ்தபா ராஜ் என்பவரை பிரியாமணி காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்துக்கு எதிராக பலர் அவதூறு பேசி மன உளைச்சலை ஏற்படுத்தியதாக பிரியாமணி தற்போது தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

எங்கள் திருமணத்துக்கு எதிராக வந்த அவதூறுகள் என்னை மிகவும் பாதித்தது. நான் மட்டும் இல்லாமல் எனது அம்மா, அப்பா ஆகியோரும் மனதளவில் கஷ்டப்பட்டனர். அப்போது கணவர் எனக்கு பக்கபலமாக இருந்தார். எது வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ கவலைப்படாமல் சினிமாவில் கவனம் செலுத்து. என்ன நடந்தாலும் நான் செல்லும் பாதையில், நான் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும், உன்னுடைய கை என்னுடன் இருக்க வேண்டும் என்றார். அப்படிப்பட்ட கணவர் எனக்கு கிடைத்தது அதிர்ஷ்டம். எங்களுக்கு எதிராக நிறைய வதந்திகளை பரப்பினார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்