கணவருக்கு பாத பூஜை செய்து... சர்ச்சையில் சிக்கிய நடிகை பிரணிதா
|தமிழில் அருள்நிதி ஜோடியாக உதயன் படத்தில் அறிமுகமான பிரணிதா தொடர்ந்து கார்த்தியின் சகுனி, சூர்யாவுடன் மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். கன்னட, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
3 ஆண்டுகளுக்கு முன்பு நிதின் ராஜு என்ற தொழில் அதிபரை பிரணிதா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ணா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் அமாவாசையை முன்னிட்டு கணவரின் காலை தொட்டு பாத பூஜை செய்யும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பிரணிதா வெளியிட்டு "அமாவாசையை முன்னிட்டு கணவருக்கு பாத பூஜை செய்தேன். இது சிலருக்கு ஆணாதிக்க சடங்கு மாதிரி தெரியலாம். ஆனால் சனாதன தர்மத்தில் இது முக்கியமான வழிபாடு.
இந்து வழிபாட்டு முறையில் ஆணாதிக்கம் என்பது அடிப்படையில்லாதது. பெண் கடவுளையும் ஆண் கடவுளுக்கு இணையாகவே வழிபடுகிறோம்'' என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார்.
பிரணிதா செயலை பலர் விமர்சித்தும், கேலி செய்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இது ஆணாதிக்க செயல் என்றும் கண்டித்துள்ளனர். ஆனால் சிலர் பிரணிதா செயலை பாராட்டி வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.