காதலில் நடிகை ஓவியா?
|இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலை வீடியோவில் தோன்றிய ஓவியாவை ஒருவர் திடீரென்று கட்டிப்பிடித்து முத்தமிட்டார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் முத்தமிட்டவர் ஓவியாவின் காதலராக இருக்கலாம் என்று வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
தமிழில் நாளை நமதே, களவாணி, முத்துக்கு முத்தாக, மெரினா, மூடர் கூடம், புலிவால் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஓவியா மலையாளத்திலும் பிரபல நடிகையாக இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று நிறைய ரசிகர்களை சேர்த்தார். பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளராக பங்கேற்ற நடிகர் ஆரவ்வை ஓவியா காதலித்ததும் அவரது காதலை ஏற்க ஆரவ் மறுத்ததும் பரபரப்பானது.
சமீப காலமாக ஓவியா நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனாலும் சமூக வலைத்தளத்தில் வீடியோ, புகைப்படங்கள் போன்றவற்றை வெளியிட்டு பரபரப்பாக இயங்கி வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலை வீடியோவில் தோன்றிய ஓவியா பிஸ்கட் சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது ஒருவர் ஓவியாவை திடீரென்று கட்டிப்பிடித்து முத்தமிட்டார்.
அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்தனர். முத்தமிட்டவர் ஓவியாவின் காதலராக இருக்கலாம் என்று வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ரசிகர்களும் அவர் உங்கள் காதலரா? அவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா? என்று ஓவியாவிடம் கேள்வி எழுப்பி பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இதற்கு அவர் விளக்கம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஓவியாவை இளைஞர் முத்தமிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.