< Back
சினிமா செய்திகள்
தனது குழந்தையை கொஞ்சும் நயன்தாரா
சினிமா செய்திகள்

தனது குழந்தையை கொஞ்சும் நயன்தாரா

தினத்தந்தி
|
25 July 2023 6:33 AM IST

படப்பிடிப்பு ஓய்வில் வீட்டில் இருந்து குழந்தையை நயன்தாரா தூக்கி கொஞ்சும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்

டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து மணந்து வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றெடுத்த நடிகை நயன்தாரா திரைப்படங்களில் நடிப்பதோடு, குழந்தைகளை வளர்ப்பதிலும் அதிக அக்கறை எடுக்கிறார்.

படப்பிடிப்பு முடிந்ததும் உடனடியாக வீட்டுக்கு திரும்பி குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது, உடைகள் மாற்றுவது என்று அவர்களை பராமரிப்பதில் நேரத்தை செலவிடுகிறார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் குழந்தையை பிரிந்து வெளியே செல்வது இல்லை. முழு நேரமும் அவர்களுடனேயே இருக்கிறார்.

இந்த நிலையில் படப்பிடிப்பு ஓய்வில் வீட்டில் இருந்து குழந்தையை நயன்தாரா தூக்கி கொஞ்சும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகிறது.

நயன்தாரா தற்போது ஜெயம் ரவி ஜோடியாக 'இறைவன்' மற்றும் இந்தியில் ஷாருக்கான் ஜோடியாக 'ஜவான்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இவை அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. இவை தவிர மேலும் 2 படங்களும் கைவசம் வைத்துள்ளார்.

மேலும் செய்திகள்