< Back
சினிமா செய்திகள்
நடன பள்ளி தொடங்கிய நடிகை நவ்யா நாயர்
சினிமா செய்திகள்

நடன பள்ளி தொடங்கிய நடிகை நவ்யா நாயர்

தினத்தந்தி
|
4 Dec 2022 12:27 PM IST

நடிகை நவ்யா நாயர் சொந்தமாக நடன பள்ளி தொடங்கி உள்ளார்.

தமிழில் 'அழகிய தீயே' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நவ்யா நாயர். சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக்கிளிகள், மாயக்கண்ணாடி, ஆடும் கூத்து உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார். 2010-ல் திருமணம் செய்து கொண்டார். தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். நவ்யா நாயர் பரத நாட்டியம் கற்று தேர்ந்தவர். சமீபத்தில் நடன ஆசிரியராக மாறி மாணவ, மாணவிகளுக்கு நடனம் கற்று கொடுக்க இருப்பதாக அறிவித்து இருந்தார். இந்த நிலையில் சொந்தமாக நடன பள்ளி தொடங்கி உள்ளார். கேரள மாநிலம் கக்கநாடு பகுதியில் உள்ள பாதமுகல் கருணாகரன் ரோடு என்ற இடத்தில் இந்த நடன பள்ளியை ஆரம்பித்து இருக்கிறார். நடன பள்ளியின் தொடக்க விழாவில் கேரளாவில் உள்ள பிரபல நடன கலைஞர்கள் பங்கேற்றனர். நடனம் கற்கும் மாணவ, மாணவிகளுக்கு 2 நாட்கள் கருத்தரங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

மேலும் செய்திகள்