< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
நடிகை மேகா ஆகாஷின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்
|27 Aug 2024 8:29 AM IST
மேகா ஆகாஷின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றன
சென்னை,
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் மேகா ஆகாஷ். இவருக்கு கடந்த 22-ம் தேதி சாய் விஷ்ணு என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்தது. அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், மேகா ஆகாஷின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றன. கடந்த 2019-ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'பேட்ட' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மேகா ஆகாஷ்.
தனுஷுடன் 'என்னை நோக்கி பாயும் தோட்டா', சிம்புவுடன் 'வந்தா ராஜாவா தான் வருவேன்' போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். கடைசியாக இவரது நடிப்பில், 'சபாநாயகன், வடக்குப்பட்டி ராமசாமி, மழை பிடிக்காத மனிதன்' உள்ளிட்ட படங்கள் வெளியாகின.