< Back
சினிமா செய்திகள்
நடிகை மீரா நந்தன் நிச்சயதார்த்தம்
சினிமா செய்திகள்

நடிகை மீரா நந்தன் நிச்சயதார்த்தம்

தினத்தந்தி
|
15 Sept 2023 7:38 AM IST

தமிழில் வால்மிகி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மீரா நந்தன். தொடர்ந்து ஆதி ஜோடியாக அய்யனார், சரத்குமாருடன் சண்ட மாருதம் மற்றும் காதலுக்கு மரணமில்லை, நேர்முகம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதை விமர்சித்த ரசிகர்களுக்கு 'துபாயில் இருக்கும் நான் அதுமாதிரிதான் உடை அணிவேன்' என்று பதிலடியும் கொடுத்தார்.

மீரா நந்தனுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் மாப்பிள்ளை தேடினர். அப்போது திருமண தகவல் மையம் மூலம் லண்டனில் கணக்காளராக வேலை பார்க்கும் ஸ்ரீஜு என்பவரை தேர்வு செய்தனர். மீரா நந்தனும், ஸ்ரீஜும் துபாயில் சந்தித்து பேசினர். இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்து போனது.

இதையடுத்து மீரா நந்தன், ஸ்ரீஜு திருமண நிச்சயதார்த்தம் கேரளாவில் உள்ள கொச்சியில் நடந்தது. நிச்சயதார்த்த புகைப்படங்களை மீரா நந்தன் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். திருமண தேதியை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

மேலும் செய்திகள்