< Back
சினிமா செய்திகள்
நடிகை மீரா ஜாஸ்மின் தந்தை காலமானார்
சினிமா செய்திகள்

நடிகை மீரா ஜாஸ்மின் தந்தை காலமானார்

தினத்தந்தி
|
5 April 2024 2:30 PM IST

நடிகை மீரா ஜாஸ்மின் தந்தை வயது மூப்பு காரணமாக, உயிரிழந்துள்ள நிலையில் இவருக்கு ரசிகர்கள் தங்களின் ஆறுதலை கூறி வருகிறார்கள்.

தமிழில் ரன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமான மீரா ஜாஸ்மின் தொடர்ந்து சண்டக்கோழி, ஆயுத எழுத்து, ஆஞ்சநேயா, திருமகன், நேபாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

இந்த நிலையில் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். 2014-க்கு பிறகு படங்களில் அவர் நடிக்கவில்லை. தற்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு "டெஸ்ட்" படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இதில் மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோருடன் இணைந்து நடிக்கிறார்.

திருமணத்தில் சறுக்கல், உடல் எடை திடீரென கூடியது என்று அடுத்தடுத்து துவண்டுக் கொண்டிருந்த நடிகை மீரா ஜாஸ்மினுக்கு அடுத்த அதிர்ச்சியாக தந்தை காலமான செய்தி பெரும் சோகத்தைக் கொடுத்திருக்கிறது. நடிகை மீரா ஜாஸ்மின் தந்தை ஜோசப் பிலிப் (83) உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று காலமானார்.

மீரா ஜாஸ்மின்.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தந்தையின் புகைப்படங்களைப் பகிர்ந்து, 'இனிமேல் நாம் மீண்டும் சந்திக்கும் வரை' என உருகியுள்ளார் திரையுலகினரும், ரசிகர்களும் நடிகை மீரா ஜாஸ்மினுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

மேலும் செய்திகள்