நடிகர் அனுராக் காஷ்யப்புடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை மஞ்சு வாரியர்
|மஞ்சு வாரியர், நடிகர் அனுராக் காஷ்யப்புடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
சென்னை,
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையான மஞ்சுவாரியர் தமிழில் அசுரன் படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, அஜித்துடன் துணிவு படத்தில் நடித்திருந்தார். தற்போது விடுதலை 2, வேட்டையன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான வேட்டையன் படத்தின் முதல் பாடலான மனசிலாயோ பாடலில் மஞ்சு வாரியரின் தோற்றம் மற்றும் நடனம் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.
இவர் கடந்த 10-ம் தேதி தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடினார். அதேபோல், நடிகர் அனுராக் காஷ்யப்பும் தனது 52-வது பிறந்தநாளை அன்று கொண்டாடினார். இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் மஞ்சு வாரியர், நடிகர் அனுராக் காஷ்யப்புடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அனுராக் காஷ்யப் தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதனை தொடர்ந்து லியோ, சமீபத்தில் வெளியான 'மகாராஜா' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.