ஆதி நடிக்கும் 'சப்தம்' படத்தில் இணையும் நடிகை லட்சுமி மேனன்!
|‘சப்தம்’ படத்தில் நடிகை லட்சுமி மேனன் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை,
இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான 'ஈரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தமிழ் சினிமாவில் வெளியான ஹாரர் படங்களின் வரிசையில் முக்கிய இடத்தைப் பிடித்தது. இதில் நடிகர் ஆதி, சிந்து மேனன், நந்தா துரைராஜ், சரன்யா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து இயக்குனர் அறிவழகன், நடிகர் ஆதி மற்றும் இசையமைப்பாளர் தமன் ஆகியோரது கூட்டணியில் மீண்டும் ஒரு திகில் கதையம்சம் கொண்ட திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு 'சப்தம்' என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மூணார் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் நடைபெற்று வந்த முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து இந்த படம் தொடர்பான அப்டேட்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் 'சப்தம்' படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் நடிகை லட்சுமி மேனன் இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'கும்கி' படம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முன்னனி நடிகையாக வலம் வந்த லட்சுமி மேனன், ஒரு பெரும் இடைவேளைக்குப் பிறகு தற்போது மீண்டும் தமிழ் படங்களில் நடிக்கிறார். தனது கைவசம் நிறைய படங்களை வைத்திருக்கும் லட்சுமி மேனன், பி.வாசு இயக்கும் சந்திரமுகி-2 படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
An announcement we have been waiting to whisper in your ears.
The talented & most loved #LakshmiMenon is onboard for #Sabdham
Starring @AadhiOfficial
An @dirarivazhagan Film
A @MusicThaman Musical
Produced by @7GFilmsSiva & @Aalpha_frames.@Dop_arunbathu @EditorSabu pic.twitter.com/Ho34IDLVyY