நடிகை கீர்த்தி சனோன் மும்பை கோவிலில் வழிபாடு...!
|தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியில் கீர்த்தி சனோன் மிகவும் பூரிப்பாக காணப்படுகிறார்
69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் பாலிவுட் முன்னணி நடிகையாக திகழும் கீர்த்தி சனோனுக்கு சிறந்த நடிகைக்காக விருது அறிவிக்கப்பட்டது. 'மிமி' என்ற இந்தி படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்துள்ளது. அந்த படத்தில், வெளிநாட்டு தம்பதிக்கு குழந்தை பெற்றுத்தரும் வாடகைத்தாய் கதாபாத்திரத்தில் கீர்த்தி சனோன் கலக்கி இருந்தார்.
தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியில் கீர்த்தி சனோன் மிகவும் பூரிப்பாக காணப்படுகிறார். இந்தநிலையில் மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவிலுக்கு கீர்த்தி சனோன் சென்று வழிபட்டார். அவரது தங்கை நூபுர் சனோனும் வந்துள்ளார்.
வழிபாட்டுக்கு பின்னர் அங்குள்ள பக்தர்களுக்கு நடிகை கீர்த்தி சனோன் இனிப்பு வழங்கினார். ஏழை பெண்களுக்கு உதவிகளையும் அவர் வழங்கினார். கீர்த்தி சனோனுடன் அப்பகுதி சிறுவர்-சிறுமிகள் ஆர்வமாக செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இதுகுறித்து நடிகை கீர்த்தி சனோன் கூறுகையில், "தேசிய விருது பெற்றது உண்மையிலேயே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எனது நடிப்புக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக இதனை பார்க்கிறேன். இதற்காக 'மிமி' படக்குழுவினருக்கு எனது நன்றிகளை தெரிவிக்கிறேன். விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்" என்றார்.