திடீரென தனது ஹேர்ஸ்டைலை மாற்றிய நடிகை குஷ்பு
|நடிகை குஷ்பு திடீரென தனது ஹேர்ஸ்டைலை மாற்றி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,
80-90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை குஷ்பு. தொடர்ந்து ரஜினி, கமல், பிரபு, சரத்குமார், சத்யராஜ், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள குஷ்பு தற்போது தென்னிந்திய சினிமாவில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வரும் நடிகை குஷ்பு, சமீபகாலமாக தனது சமூகவலைதள பக்கத்தில் வித்தியாசமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஷார்ட் ஹேர் லுக்கில் குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணயைத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும், குஷ்பு தலைமுடிக்கு என்ன ஆகிடுச்சு, இந்த கெட்டப் புதிய படத்திற்காகவா? சீரியலுக்காகவா, அல்லது உங்களின் புதிய லுக்கா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
குஷ்புவின் இந்த புகைப்படத்தை பார்த்த நடிகை கனிகா, தாயம் என கமெண்ட் போட்டுள்ளார். அதேபோல் நடிகை மாளவிகா லுக்ஸ் சூப்பர் கிளாஸி அண்ட் சிக் என்றும், நடிகை ராஷ்மி கவுதம் இது ஜோக் தானே மேடம் என்றும் கேட்டுள்ள நிலையில், ரசிகர்கள், நெட்டிசன்கள் என பலரும் குஷ்புவின் இந்த ஹேர்ஸ்டைலை பார்த்து ஆச்சரியமடைந்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைக்குகளை குவித்து வருகின்றன. இந்த பதிவில் மாற்றம் ஒன்றே மாறாதது என்று குஷ்பு பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.