< Back
சினிமா செய்திகள்
ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய நடிகை கத்ரீனா கைப்
சினிமா செய்திகள்

ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய நடிகை கத்ரீனா கைப்

தினத்தந்தி
|
12 March 2024 4:38 PM IST

கத்ரீனா கைப் உ.பி. அணியை ஆதரிக்கும் விதமாக அந்த அணியின் ஜெர்சியை அணிந்திருந்தார்.

புதுடெல்லி,

கடந்த 2003-ம் ஆண்டு வெளியான 'பூம்' திரைப்படம் மூலம் பாலிவுட் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் கத்ரீனா கைப். தனது முதல் படத்திலேயே அமிதாப் பச்சன், ஜாக்கி ஷெராப் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த கத்ரீனா, தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக 'டைகர் 3', விஜய் சேதுபதியுடன் 'மெரி கிறிஸ்துமஸ்' உள்ளிட்ட படங்களில் கத்ரீனா நடித்திருந்தார்.

இந்நிலையில் டெல்லியில் நேற்று பெண்கள் பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற்றது. அதில் உ.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் இடையேயான பரபரப்பான போட்டியை பார்ப்பதற்காக கத்ரீனா கைப் மற்றும் அவரது சகோதரி இசபெல் கைப்வுடம் வந்திருந்தார். அப்போது கத்ரீனா கைப் உ.பி. அணியை ஆதரிக்கும் விதமாக அந்த அணியின் ஜெர்சியை அணிந்திருந்தார்.

அந்த போட்டியின் போது கத்ரீனா பால்கனியில் அமர்ந்திருந்தார். அப்போது அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் முயற்சித்தனர், ஆனால் பால்கனியில் இருந்ததால் அவர்களால் எடுக்க முடியாமல் போனது. இதை பார்த்த கத்ரீனா ரசிகரின் செல்போனை பெற்று பால்கனியில் இருந்த படியே செல்பி எடுத்து செல்போனை திருப்பி தரும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்