இயக்குனரால் அச்சத்தில் இருக்கும் நடிகை கங்கனா...!
|நடிகை கங்கனா மறைந்த பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் ‘எமர்ஜென்சி’ படத்தில் நடித்துள்ளார்
தமிழில் 'தாம்தூம்', 'தலைவி' படங்களில் நடித்துள்ள கங்கனா ரணாவத் தற்போது மீண்டும் 'சந்திரமுகி' 2-ம் பாகம் பேய் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்தி திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
தற்போது மறைந்த பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் 'எமர்ஜென்சி' படத்தில் நடித்துள்ளார். படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் பிரபல இந்தி டைரக்டர் கரண் ஜோகர் 'எமர்ஜென்சி' படத்தை பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்.
இதற்கு பதில் அளித்து கங்கனா ரணாவத் கூறும்போது, "கரண் ஜோகர் பேச்சு எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு முன்பு நான் நடித்த 'மணிகர்னிகா' படம் வெளியாகும்போதும் அந்த படத்தை பார்க்க ஆர்வமாக இருப்பதாக சொல்லிவிட்டு பிறகு படத்துக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்தார். முக்கிய நடிகர்-நடிகைகளுக்கு பணம் கொடுத்து என் மீது சேற்றை வாரி இறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். என் படத்தை முடக்கிவிடவும் துடித்தார்.
இப்போது 'எமர்ஜென்சி' படத்தை பார்க்க விரும்புவதாக தெரிவித்து இருப்பதால் எனக்கு பயம் ஏற்பட்டு உள்ளது'' என்றார்.