< Back
சினிமா செய்திகள்
நடிகர் ரிஷப் ஷெட்டியின் நடிப்பை பார்த்து வியந்த நடிகை கங்கனா ரணாவத்
சினிமா செய்திகள்

நடிகர் ரிஷப் ஷெட்டியின் நடிப்பை பார்த்து வியந்த நடிகை கங்கனா ரணாவத்

தினத்தந்தி
|
25 Oct 2022 8:33 AM IST

காந்தாரா திரைப்படத்தில் நடிகர் ரிஷப் ஷெட்டியின் நடிப்பை பார்த்து வியந்ததாக நடிகை கங்கனா ரணாவத் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பிரபல கன்னட திரைஉலக நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து தயாரித்த படம் காந்தாரா. இந்த படம் மாபெரும் வெற்றிபெற்று இருக்கிறது. சர்ச்சைகளுக்கு இடையிலும் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த திரைப்படத்தை பார்த்த பிரபல நடிகை கங்கனா ரணாவத் நிருபர்களிடம் கூறியதாவது:-

குடும்பத்துடன் வந்து காந்தாரா திரைப்படம் பார்த்தேன். ரிஷப் ஷெட்டியின் நடிப்பு என்னை வியக்க வைத்தது. படம் முடிந்து தியேட்டருக்கு வெளியே வந்த பின்பும் எனக்கு நடுக்கம் நிற்கவில்லை. ரிஷப் ஷெட்டியின் நடிப்பை மறப்பதற்கு சாத்தியமே இல்லை. மிகவும் அதிரூபமான ஒரு சினிமாவை பார்த்த திருப்தி எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த திரைப்படத்தை பார்த்த நினைவில் இருந்து நான் மீண்டு வர குறைந்தது ஒரு வாரமாவது ஆகும். இந்த திரைப்படத்தை நேரடியாக ஆஸ்காருக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்