< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை காஜல் அகர்வால், கணவருடன் சாமி தரிசனம்
|26 Sept 2022 12:54 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை காஜல் அகர்வால், கணவருடன் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை காஜல் அகர்வால், கணவருடன் சாமி தரிசனம் செய்தார். இன்று காலை திருமலைக்கு வருகை தந்த காஜல் அகர்வால், தனது கணவருடன் இணைந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக்க மண்டபத்தில் காஜல் அகர்வாலுக்கு வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
கணவருடன் இணைந்து முதல்முறையாக திருப்பதியில் சாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிப்பதாக காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். தரிசனம் முடித்து வெளியே வந்த காஜல் அகர்வாலை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.