நடிகை ஜோதிகாவின் வெறித்தனமான ஒர்க் அவுட் - வீடியோ வைரல்
|பிட்னஸ் என்பது எடையை குறைப்பது அல்ல.. வாழ்க்கையை அதிகரிப்பது என்று நடிகை ஜோதிகா கூறியுள்ளார்.
மும்பை,
அஜித், விஜய், ரஜினி என டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து பிரபலமானவர் ஜோதிகா. 1999 -ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வாலி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே சிறந்த அறிமுக நாயகி என்ற விருதை பெற்றார்.
இந்தநிலையில் நடிகை ஜோதிகா கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பிறகு இந்தி சினிமாவில் களமிறங்கி இருக்கிறார். அவர் அஜய் தேவ்கன், மாதவன் உடன் சைத்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தி சினிமாவில் கவனம் செலுத்துவதற்காக ஜோதிகா தற்போது மும்பையில் செட்டில் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ஜோதிகா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
மீண்டும் சினிமாவில் ஜொலிக்கவேண்டும் என்பதற்காக தனது எடையை குறைக்க முடிவெடுத்து தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கி இருக்கிறார்."பிட்னஸ் என்பது எடையை குறைப்பது அல்ல.. வாழ்க்கையை அதிகரிப்பது என குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அவர் கடுமையாக உடற்பயிற்சி செய்கிறார். ஜிம்மில் தலைகீழாக நின்று ஒர்க் அவுட் செய்யும் இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.